வாஷிங்டன் சுந்தருக்கு கைகூப்பி நன்றி சொன்ன விராட் கோலி..! ஓவர்த்ரோவில் கிடைத்த 5 ரன்களும்.. இணையத்தைக் கலக்கும் வைரல் ரியாக்ஷனும்…!!

By Swetha on வைகாசி 27, 2026

Spread the love

ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர்-1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோதின. இப்போட்டியின் போது குஜராத் அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வீசிய ஓவர்த்ரோ (Overthrow) மூலம் விராட் கோலிக்கு கூடுதலாக 5 ரன்கள் கிடைத்தன. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இப்போட்டியின் ஐந்தாவது ஓவரை ஜேசன் ஹோல்டர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை ஆஃப்-சைடில் தட்டிவிட்டு விராட் கோலி ஒரு இக்கட்டான சிங்கிள் (Single) எடுக்க முயன்றார். அப்போது கவர்ஸ் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர், பந்தைப் பிடித்து பந்துவீச்சாளர் முனையில் இருந்த விக்கெட்டைக் குறிவைத்து வேகமாக எறிந்தார். ஆனால் பந்து விக்கெட்டில் படாமல் தவறி, எல்லைக் கோட்டை நோக்கி ஓடி பவுண்டரியானது. இதனால் விராட் கோலிக்கு ஓடி எடுத்த ஒரு ரன்னுடன் சேர்த்து மொத்தம் 5 ரன்கள் பரிசாகக் கிடைத்தன.

   

இந்த இக்கட்டான ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பியதோடு, எதிர்பாராமல் 5 ரன்களும் கிடைத்ததால் விராட் கோலி பெரும் மகிழ்ச்சியடைந்தார். மைதானத்திலேயே அவர் வாஷிங்டன் சுந்தரைப் பார்த்து கைகளைக் கூப்பி நகைச்சுவையாக ‘நன்றி’ (Thanks) தெரிவித்தார். விராட் கோலியின் இந்த கலகலப்பான ரியாக்ஷன் ரசிகர்களைக் கவர்ந்து இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 254 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.