ரோட்ல போகும்போது உஷார்!… திடீரென குறுக்கே பாய்ந்த நாய்… நடுரோட்டில் துடிதுடித்த தாய், மகன்… பதறவைக்கும் சம்பவம்…!!

By Gayathri on கார்த்திகை 9, 2026

Spread the love

காசியாபாத் மாவட்டம் இந்திராபுரம் கனவானி சோதனைச் சாவடி அருகே, நேற்று மாலை சுமார் 7:30 மணியளவில் எதிர்பாராத சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. அப்பகுதியில் தாயும் மகனும் புல்லட் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே ஒரு நாய் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி நாய் வாகனத்தின் மீது பலமாக மோதியதால், நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.

இவ்விபத்தின் தாக்கத்தால் மோதிய நாய் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. சாலையில் விழுந்து காயங்களுடன் தவித்த தாயையும் மகனையும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்; இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.