பெண் அதிகாரிகள் என்றும் பாராமல்… 9 மணி நேர நரகம்… மேற்கு வங்க அரசுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்… நீதிபதியின் அதிரடி கருத்து…!!!

By Rajeshwari on சித்திரை 2, 2026

Spread the love

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு நீதித்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இச்சம்பவம் குறித்து மாநில அரசை கடுமையாகச் சாடியது.

மேலும் தேர்தல் நடைமுறைகளைச் சீர்குலைக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட முயற்சி இது என்று குறிப்பிட்ட நீதிபதி, நள்ளிரவு 2 மணி வரை தாம் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகக் கூறினார். ஒரு மாநிலத்தில் நீதித்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் எச்சரித்தார்.

   

இந்த வன்முறைச் சம்பவத்தில் மூன்று பெண் அதிகாரிகள் உட்பட ஏழு பேர் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டக்காரர்களால் சிறைவைக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

   

இதனால் மாநில அரசின் மெத்தனப் போக்கிற்குத் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்த தலைமை நீதிபதி, மேற்கு வங்கத்தில் நிலவும் அரசியல் துருவமுனைப்பு போன்ற ஒரு சூழலைத் தான் இதுவரை பார்த்ததில்லை என்று வேதனை தெரிவித்தார். மேலும், நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.