“பாரத மாதாவை விற்றுவிட்டார்கள்!.. மோடி ட்ரம்பின் பிடியில் உள்ளார்”… பாஜகவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ராகுல் காந்தி…!!

By Muthu Mani on சித்திரை 2, 2026

Spread the love

அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடினார். “இந்தியாவின் மிக முக்கியமான சொத்தான மக்களின் தரவுகள் (Data) அமெரிக்காவிற்கு விற்கப்பட்டுள்ளன” என்று குற்றம் சாட்டிய அவர், பிரதமர் மோடி தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாக அதிரடியாகப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இது இந்திய விவசாயிகளையும் சிறு தொழிலதிபர்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் எச்சரித்தார். அமெரிக்காவின் மிகப்பெரிய இயந்திரமயமாக்கப்பட்ட பண்ணைகளுக்கு இந்தியச் சந்தையை மோடி திறந்துவிட்டுள்ளதால், நம் நாட்டுச் சிறு விவசாயிகள் நசுக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். “எந்தவொரு இந்தியப் பிரதமரும் செய்யாத துரோகத்தை மோடி செய்துள்ளார்” என்றும் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.

   

தரவுப் பாதுகாப்பு (Data Security) குறித்துப் பேசிய ராகுல், “இந்தியர்களின் தரவுகளை அமெரிக்க நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டியவாறு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்” என்றார். மேலும், எரிசக்தி பாதுகாப்பிலும் இந்தியா தனது சுயாட்சியை இழந்துவிட்டதாகவும், இனி இந்தியா யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காவே தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

   

வருகிற ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள அசாம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம் தோறும் நிதியுதவி மற்றும் சிறு தொழில்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை போன்ற 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் என உறுதி அளித்தார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீதும் ஊழல் புகார்களைச் சுமத்திய ராகுலின் இந்தப் பேச்சு, தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.