15 ஆண்டுகளை நிறைவு செய்த “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படம்… நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ…!!!

By Nanthini on மாசி 27, 2025

Spread the love

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. பழைய ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். இவருடைய தந்தை டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமான சிம்பு தற்போது அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகின்றார். சிம்புவிற்கு பெரிய ஹிட் கொடுத்த படம் என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் தான். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது.

இவர்களை கவரவே 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்தேன்.." - நடிகர்  சிம்பு சொன்ன Secret!

   

இணை சேராத காதலர்களின் கதையாக உருவான இந்த திரைப்படம் வெளியானபோது ஏ ஆர் ரகுமானின் பாடல்களுக்காகவும் காட்சி அமைப்புகளுக்காகவும் ரசிகர்களை ஈர்த்தது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற விடிவி கணேஷ் பேசும் “நீங்க என்ன சொல்லுது, ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுதா?” என்ற வசனத்தை இன்றைய கால இளைஞர்களும் பயன்படுத்தும் அளவுக்கு படத்தில் வசனங்களின் பங்கு அபாரமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படம் சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை பிவிஆர் திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்ட நிலையில் இப்படம் ஆயிரம் நாட்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

   

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா?

 

அதேசமயம் இதுவே மறு வெளியீட்டில் ஆயிரம் நாட்களைக் கடந்த முதல் இந்திய சினிமா திரைப்படமாகும். இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதனை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இதனைத் தொடர்ந்து சிம்பு நடிகர் விடிவி கணேஷ் உடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.