தமிழில் ராஜா ராணி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் அட்லீ. முதலில் எந்திரன் மற்றும் நண்பன் என்று ரஜினி மற்றும் விஜய் திரைப்படங்களுக்கு இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில் அட்லி பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அப்படி அவர் இயக்கிய முதல் திரைப்படம் தான் ராஜா ராணி. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவில் தன்னை ஒரு இயக்குனராக அட்லீ நிலை நிறுத்தினார். திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்திற்குப் பிறகு விஜயை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ அடுத்ததாக விஜயுடன் இரண்டாவது முறையாக இணைந்து மெர்சல் திரைப்படத்தையும் இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்தார். அதன்பிறகு விஜயுடன் பிகில் திரைப்படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து நான்கு தமிழ் படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த அட்லி ஹிந்தியில் அறிமுகமானார். ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை அவர் இயக்கி இருந்த நிலையில் இந்த திரைப்படமும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த அட்லி தற்போது அல்லு அர்ஜுன் உடன் இணைந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இறுதியாக புஷ்பா 2 திரைப்படம் வெளியான நிலையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1700 கோடி வசூல் செய்திருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இப்படியான நிலையில் இயக்குனர் அட்லியுடன் இணைந்து நடித்த அல்லு அர்ஜுன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா 2 வெற்றிக்கு பிறகு பல முன்னணி இயக்குனர்கள் அல்லு அர்ஜுனை நோக்கி திரும்பி உள்ளனர்.
ஜவான் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் திசையில் இந்த திரைப்படம் உருவாக உள்ள நிலையில் பான் இந்தியா படமாக ஆக்சன் கதையில் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மிகப்பெரிய இரண்டு நிறுவனங்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கின்றன. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு 250 கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கும் நிலையில் அட்லிக்கு 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய இயக்குனர்களில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய இயக்குனராக அட்லீ மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.