களவாணி படத்துல நான்தான் முதல்ல ‘ஓவியாவுக்கு அண்ணன்’… விமல் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

By vinoth on மார்கழி 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் இரண்டாம் நிலை நடிகர்களில் ஒருவர் விமல். கூத்துப் பட்டறையில் படித்த இவர் பல படங்களில் துணை நடிகராகத் தோன்றி, அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பசங்க படம் மூலமாகக் கவனம் பெற்றார். அடுத்தடுத்து அவர் நடித்த களவாணி, வாகை சூடவா மற்றும் தேசிங்கு ராஜா ஆகிய படங்கள் அவரை கவனிக்கத்தக்க நடிகராக்கின.

சில ஆண்டுகளுக்கு முன்னர் விலங்கு என்ற வெப்சீரிஸ் மூலம் அவர் ஓடிடி உலகிலும் கால்பதித்தார். இப்படி வெற்றிகரமாக நடிகராக அவர் வலம் வந்தாலும் அவரால் முன்னணி நடிகராக வரமுடியவில்லை. அதற்கு இடையில் அவர் தேர்வு செய்த சில மோசமான படங்கள்தான் காரணம்.

   

ஆனால் இப்போது சார் போன்ற படங்களில் நடித்து கம்பேக் கொடுக்க முயன்று வருகிறார். விமல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள பணங்கொம்பு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த விமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடனம் கற்க தொடங்கினார். சினிமாவில் வாய்ப்பு தேட வேண்டும் என்று சென்னைக்கு குடி பெயர்ந்தார். சினிமாவில் சில படங்கள் நடித்தபோது அவர் தன்னுடைய முறைப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

   

 

இந்நிலையில் களவாணி திரைப்படத்தில் கதாநாயகன் ஆகும் வாய்ப்பு எப்படித் தனக்கு கிடைத்தது என்பது குறித்து விமல் தற்போது பேசியுள்ளார். அதில் “களவாணி படத்துல முதல்ல ஓவியாவோட அண்ணன் கதாபாத்திரத்துல நடிக்கதான் என்னைக் கேட்டாங்க. ஆனால் சற்குணம் சார் என்னை ஹீரோவாக்கணும்னு நெனச்சிருந்தார் போல. அப்போது பசங்க படத்துல நன் நடிப்பது அவங்களுக்குத் தெரிஞ்சது. அந்த படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார் என்பதால் அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. அதனால்  தயாரிப்பாளர் நசீர் சார் நீங்களே ஹீரோவா பண்ணுங்க என்றார். அப்படிதான் நான் களவாணி படத்துல ஹீரோவானேன்” எனக் கூறியுள்ளார்.