குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகர் கின்னஸ் பக்ரு.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!

By Nanthini on மார்கழி 26, 2024

Spread the love

பிரபல நடிகரான பக்ரு ஏழாம் அறிவு, காவலன், டிஷ்யூம், பஹீரா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பக்ரு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். மலையாளத்தில் உருவான குட்டியும் கோலும் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார். மற்ற மனிதர்களை விட பாத்ரூம் சற்று உயரம் குறைவாக இருந்தார் அதனை வைத்து மற்ற காமெடி நடிகர்கள் அவரை படங்களில் கலாய்த்தனர்.

Guinness pakru | Latest Guinness pakru News, Videos, Photos - tamil360newz

   

தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் பக்ரு நடித்துள்ளார். நடிப்பதற்கு திறமை மட்டும் இருந்தால் போதும் உயரம் தேவையில்லை என நிருபித்து காட்டி கின்னஸ் ரெக்கார்டிலும் சாதனை படைத்தவர் பக்ரு. உயரம் குறைந்த நடிகர்களை வைத்து உருவாக்கி இருந்த அல்புத தீபு திரைப்படம் மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் அற்புதத் தீவு எனும் பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

   

 

இவர் கின்னஸ் பக்ரு எனவும் அழைக்கப்படுகிறார். பகுருவுக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகளுக்கும் இளைய மகளுக்கும் 17 வயது வித்தியாசம். இந்த நிலையில் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வரும் பக்ரு தனது குடும்ப புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அதன்படி நேற்று தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் நடிகர் பக்ருவுக்கு இவ்வளவு பெரிய மகளாய் என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Guinnespakru பதிவைப் பகிர்ந்துள்ளார் (@guinnespakru_official)