நகராட்சி பணியாளரை காலில் விழ வைத்த கொடுமை… சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி… பரபரப்பை கிளப்பும் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 3, 2025

Spread the love

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்கு கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வந்த இருபதாவது வார்டு திமுக கவுன்சிலர் ரம்யா ராஜா என்பவர் தன்னுடைய பகுதியில் நடைபெற்ற பயணிகளுக்கான நிதி சம்பந்தமான விவரத்தை கேட்டுள்ளார். அப்போது அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் பட்டியல் என சமூகத்தை சேர்ந்த முனியப்பன் என்பவர் அலுவலக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ரம்யா ராஜா கேட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா முனியப்பனை ஒருமையில் பேசியதாக கூறப்படும் நிலையில் இதனை அறிந்த நகரம் என்ற தலைவர் நிர்மலாவின் கணவரும் நகரமன்ற உறுப்பினருமான ரவிச்சந்திரன் இடம் கூறியதும் முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் இல்லாத நிலையில் அவருடைய அறைக்கு அழைக்கப்பட்ட முனியப்படை அங்கிருந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா மற்றும் அதிகாரிகள் பல கேள்விகளைக் கேட்டு ஒருமையில் பேசி திட்டி உள்ளனர். ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் ரம்யா ராஜாவிடம் முனியப்பனை மன்னிப்பு கேட்க கூறிய போது முனியப்பன் மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

   

இதனை ஏற்காத ரம்யா ராஜா மற்றும் அங்கிருந்தவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் வேறு வழி இல்லாத முனியப்பன் தன்னுடைய குடும்ப சூழல் கருதி தனது அரசு வேலையை காப்பாற்றிக் கொள்வதற்காக ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதுள்ளார். இது தொடர்பான காட்சி அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாளர் நிலையில் தற்போது அது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.