தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக இருந்தவர் அசோகன். திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர் அசோகன். இவரது இயற்பெயர் அந்தோணி என்பதாகும். சிறுவயதிலிருந்தே மேடை நாடகங்களில் ஆர்வம் கொண்டு நடிக்க ஆரம்பித்தார் அசோகன். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் அசோகன். கல்லூரி படிப்பை முடித்த பின்பு இயக்குனர் டி ஆர் ராமன்னாவை சந்தித்த அசோகன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டார். அவ்வையார் திரைப்படத்தில் சிறுவேடத்தில் நடித்து அறிமுகமானார் அசோகன்.

#image_title
பின்னர் 1959 ஆம் ஆண்டு பெண் குலத்தின் பொன்விளக்கு என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் அசோகன். 1961ம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திராத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் அசோகன். 1960 70களில் புகழின் உச்சியில் இருந்த அசோகன் எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஆகியோர் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களும் நடித்து பிரபலமானார். சினிமாவை தான் இவர் கொடூர வில்லன்.

#image_title
ஆனால் நிஜத்தில் அப்படியல்ல. அதற்கு நேர்மாறானவர். தன்மையாக பழகக்கூடியவர். உதவி என்று யாரவது கேட்டால் உடனே உதவி செய்வாராம். உண்மையில் உன் விலை என்ன என்ற படத்தில் படித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு காட்சியில் கோட் பாக்கெட்டில் வைக்க வேண்டிய துப்பாக்கியை பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டார்.

#image_title
ஷூட்டிங்கில் துப்பாக்கியால் சுட வேண்டும். அப்போது அவர் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கும்போது திடீரென வெடித்தது. ஆனால் அது டம்மி துப்பாக்கி தானாம். இதனால் அவருக்கு ஒன்னும் ஆகவில்லையாம். அப்போதும் அசோகன் என்ன சார் நல்லவேளை எதுவும் ஆகல. இல்ல சாகும்போதுகூட அசோகன் அசிங்கமா செத்தான்னு செய்தி வந்திருக்கும்னு சொன்னாராம் அவ்வளவு நல்லவர்.
