பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்கனவே அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். தங்கலான் திரைப்படத்தை ரஞ்சித் மாபெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார். கே.ஜி.எப் எனப்படும் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கலான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். மேலும் பசுபதி, மாளவிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நேற்று சுதந்திர தின ஸ்பெஷலாக தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றுள்ளது. படத்தில் விக்ரமின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. இந்த படத்திற்கு குறைந்தபட்சம் தேசிய விருது கொடுக்க வேண்டும் இல்லை என்றால் போராட்டம் பண்ணுவோம் என ரசிகர்கள் கூறும் அளவுக்கு விக்ரம் தனது முழு உழைப்பையும் போட்டுள்ளார்.

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தங்கலான் திரைப்படம் முதல் நாள் இந்தியாவில் 12.60 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 11 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் தங்கலான் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

