‘சேது’ படத்தில் தன்னை கருப்பாக காட்ட விக்ரம் செய்த செயல்… உண்மையான டெடிகேஷன்னா அது சியான் தான் பா…

By Begam

Published on:

‘சீயான் விக்ரம்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். இவர் திரையுலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னணி நடிகராக தற்பொழுது வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது என பலவிருதுகளுக்கு  சொந்தக்காரரும் ஆவார். ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானார்.

 

   

இதை தொடர்ந்து அவர் சேது, சிறகுகள், விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, ஜெமினி, கிங், சாமி, அருள், அந்நியன், பீமா, கந்தசாமி, ராவணன், ராஜபாட்டை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘கோபுரா’. இத்திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படம் ஸ்டுடியோ கிரீன் செவன் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகர் விக்ரம் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர். தான் நடிக்கு கதாபாத்திரமாகவே மாறி, அதற்காக தன் உடலையும் , மனதையும் வருத்திக் கொள்பவர். தற்பொழுது நடிகர் விக்ரமின் இந்த குணத்தை பற்றி பிரபல சினிமா செய்தியாளர் அளித்த பேட்டியில், “நடிகர் விக்ரம் கமலஹாசனை போல 90% தான் நடிக்கும் கதாபத்திரத்திற்க்காக தன்னை வருத்திக் கொள்ள கூடியவர்.

‘சேது’ படம் கும்பகோணத்தில் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஷூட்டிங் முடிந்தும் கூட அவர் வெளியிலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டே தான் இருப்பாராம். ஏனெனில் இயற்கையாகவே அந்த களைப்பும் , சோர்வும் , கருப்பு நிறமும் தனக்கு ஏற்பட வேண்டும்’ என்று அவர் அப்படி செய்தார் என்று கூறியுள்ளார். மேலும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக தற்பொழுது உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தையும் நாம் கூறலாம். இத்திரைப்படத்தில் அந்த பூர்வகுடி மக்களை போலவே வாழ்ந்து நடித்தும் காட்டியுள்ளார். அவரின் இந்த டெடிகேஷன் தான் அவருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொடுத்துள்ளது.