தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். புதுவசந்தம் சூரியவம்சம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பூவே உனக்காக வானத்தை போல என அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் மாஸ் ஹிட் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அவர் படங்கள் எதுவும் டைரக்ட் செய்யவில்லை. இதுகுறித்து அவர் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அதில் இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, என்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் தான் நான் படங்கள் பண்ணாமல் அவரை அருகில் இருந்து பார்த்துக் கொள்கிறேன். அவரும் நீங்கள் போய் படம் பண்ணுங்க, என்னை பார்த்துக்க நர்ஸ் இருக்காங்க என்று சொல்கிறார். ஆனாலும் எனக்கு ஒரு பயம் இருக்கு. யாரையும் நம்பி இப்படி விட்டுட்டு போக முடியாது.
வாரத்தில் ஒரு நாள் கோவிலுக்கு போவேன். அது மட்டும்தான் என் மனைவியை நான் பிரியும் நேரம். மற்ற எல்லா நேரமும் நான் அவரோடு தான் இருக்கிறேன். மாலையில் பக்கத்தில் வாக்கிங் செல்வேன். இது மட்டும்தான் நான் அவரை விட்டுவிட்டு வெளியில் செல்லும் நேரம். அதனால் படங்கள் இயக்குவதில்லை என்று தனது மனைவி குறித்து இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்
