நான் எமோஷனல் படம் எடுத்ததைப் பார்த்ததும் பலரும் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள்… ஏன்னா?- இயக்குனர் விக்ரமன் பகிர்ந்த தகவல்!

By vinoth on மார்கழி 21, 2024

Spread the love

1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

   

அதனால் கடைசியாக அவர் இயக்கிய படமாக மரியாதை படம் அமைந்தது. அந்த படம் படுதோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு அவர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. அதனால் இப்போது சினிமாவில் இருந்து விலகி இடைவெளி எடுத்துக் கொண்டு அவரது மகனைக் கதாநாயகனாக்கியுள்ளார்.

   

விக்ரமன் படங்களின் பார்முலா என்னவென்று கூர்ந்து பார்த்தால் ஒரு எமோஷனலான கதைக்களம், அதைச் சுற்று நகைச்சுவை கதாபாத்திரங்கள் என நகர்த்திக் கொண்டே சென்று எமோஷனலாகக் கதையை முடிப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த பார்முலா தேய்வழக்காக ஆனதால் அவரது படங்கள் ஓடவில்லை.

 

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “நான் எமோஷனலான படங்கள் எடுப்பதைப் பார்த்து என் கூட வேலைப் பார்த்தவர்களே அதிர்ச்சி ஆகிவிட்டார்கள். ஏனென்றால் நான் நகைச்சுவை படங்கள்தான் பார்ப்பேன். எனக்கு நகைச்சுவை நன்றாக வரும். ஆனால் எதேச்சையாக என் முதல் படம் எமோஷனலான படமாக அமைந்தது.

அப்புறம் அந்த பார்முலாவே செட் ஆகிவிட்டது. ஆனால் கதைக்குள் முடிந்தளவு நகைச்சுவையை வைப்பேன். நகைச்சுவைக் கலைஞர்கள் எதாவது மாற்றம் செய்தால் அது நன்றாக இருந்தால் மட்டும் அனுமதிப்பேன். மற்ற காட்சிகள் எதையும் ஷூட்டிங்கின் போது மாற்றவே மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.