வானத்தைப் போல படத்தில் நான் செய்த தவறு.. விஜய்காந்த் சாரோட மாஸ மிஸ் பண்ணிட்டேன் – இயக்குனர் விக்ரமன் ஓபன் டாக்!

By vinoth on பங்குனி 28, 2025

Spread the love

1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

   

அவர் இயக்கியதிலேயே மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் என்றால் அது விஜயகாந்த் நடித்த வானத்தைப் போல திரைப்படம். அதில் விஜயகாந்த் இரட்டை வேடங்களிலும் பிரபுதேவா, மீனா, லிவிங்ஸ்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களிலும் நடித்திருந்தனர்.

   

இந்த படத்தில் முதலில் விஜயகாந்தே இல்லையாம். இயக்குனர் விக்ரமன் அந்த மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்தால் நன்றாக் இருக்கும் என முடிவு செய்திருந்தாராம். ஆனால் சூரியவம்சம் ஹிட்டுக்கு ஏன் ஜனகராஜை வைத்து படம் பண்ண வேண்டுமென தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி விஜயகாந்தை நடிக்க வைக்கலாம் என சொன்னதும் வேறு வழியில்லாமல் கதையை மாற்றினாராம்.

 

இந்நிலையில் வானத்தைப் போல படத்தைப் பற்றி பேசியுள்ள விக்ரமன் அதில் தான் விஜயகாந்தின் மாஸை சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார். அதில் “நான் வானத்தைப் போல படத்தை எடுத்துவிட்டேன். அதை போட்டு பார்க்கும் போதுதான் எனக்கு அப்படித் தோன்றியது. ஒரு காட்சியில் மீனாவுக்குப் பிறந்தநாள். எல்லோரும் ஆங்கிலத்தில் அவரை வாழ்த்துவார்கள். விஜயகாந்த் சார் தானும் ஆங்கிலத்தில் வாழ்த்தவேண்டும் என ஆனந்திடம் கேட்க அவர் தவறாக “I want to marry you” என சொல் என சொல்லிவிடுவார்.

இதை விஜயகாந்த் சார் மீனாவிடம் சொல்ல அவர் திட்டி அனுப்பிவிடுவார். அப்போதுதான் விஜயகாந்த் சாருக்கு அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் தெரியும். சோகமாக சென்றுகொண்டிருப்பார். அப்போது ஆனந்த் வந்து ‘எப்படி இருக்கு?’ எனக் கேட்டு, அதற்கு விஜயகாந்த் சார் அவரை ஒரு அறைவிட்டு “இப்ப உனக்கு எப்படி இருக்கோ, அப்படிதான் எனக்கும் இருக்கு’ எனக் கூறியிருந்தால் மாஸாக இருந்திருக்கும். ஆனால் நான் அவர் சோகமாக செல்வது போலவே எடுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.