1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.
அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.
அதனால் வரிசையாக அவர் இயக்கிய படங்கள் தோல்வி அடையத் தொடங்கின. அப்படி அவர் இயக்கி படுதோல்வி அடைந்த படங்களில் ஒன்றுதான் பரத் மற்றும் ஜெனிலியா நடித்த சென்னை காதல் திரைப்படம். அந்த படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு அந்த படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
அதில் “அப்போது விக்ரமன் என்னிடம் இன்னொரு கதை சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் திடீரென்று இப்போதைய ட்ரண்ட்டுக்கு ஏற்றமாதிரி நான் படம் பண்ணவேண்டும் என சென்னைக் காதல் படக் கதையை சொன்னார். நான் அவரிடம் ‘நீங்கள் முதலில் சொன்ன கதைதான் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் உங்களுக்காக சென்னை காதல் படத்தைத் தயாரிக்கிறேன் என்றேன்.
அந்த படத்தால் எனக்கு பெரிய அளவில் நஷ்டம். ஆனாலும் நான் ரிலீஸ் நேரத்தில் அவரின் இறுதி பேமெண்ட் கொடுக்கப் போனேன். ஆனால் அவர் “எனக்காக இந்த படத்தை நீங்கள் தயாரித்தீர்கள் அதனால் உங்களுக்கு நஷ்டம். அதனால் நான் இந்த பணத்தை வாங்க மாட்டேன்” எனக் கொடுத்துவிட்டார். நான் எவ்வளவோ சொல்லியும் என்னிடம் அந்த செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.
