இந்த ஆள் என்ன நடிக்கப்போகிறாருன்னு நினைச்சேன்.. ஆனா ஆப்ரேஷன் காலோட.. இங்கிலாந்து நடிகரை புகழ்ந்து பேசிய விக்ரம்..!!

By admin on ஆவணி 10, 2024

Spread the love

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கபான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகன், முத்துக்குமார், ஹரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டானியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற 15-ஆம் தேதி தங்கலான் திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

தங்கலான்' படத்தில் தனது அனுபவம் குறித்து பகிர்ந்த – ஹாலிவுட் நடிகர் டேனியல்  கால்டாகிரோன்.

   

இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். ஷூட்டிங் ஏற்கனவே முடிவடைந்ததால் தற்போது படக்குழுவினர் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் விக்ரம் பேசியதாவது, இங்கிலாந்து நடிகர் டானியல் பெரிய ஆக்டராக இருப்பார். நம்ம கூட எல்லாம் எங்க பேச போறாரு. தனியா இருப்பார் என்று நினைச்சேன். ஆனால் அவர் எங்க கூட சேர்ந்து தான் டிராவல் பண்ணினார்.

   

ரஞ்சித் மீது நம்பிக்கை வைத்திருந்தேன்.. ஸ்க்ரிப்ட்டைக்கூட படிக்கவில்லை..  தங்கலான் நடிகர் டேனியல் ஓபன் டாக் | Thangalaan Actor Daniel Caltagrone  Talks about Pa ...

 

இந்த ஆளு என்ன நடிக்க போறார்னு கூட நினைச்சு இருக்கேன். ஆனா எதிர்பாக்காத அளவுக்கு சூப்பரா நடிச்சிருக்காரு. அவருக்கு காலில் பிராப்ளம் இருக்கு அதையும் பொருட்படுத்தாமல் படத்துல நடிச்சிருக்காரு. எல்லா காட்சிகளையும் நடிச்சு முடிச்சு விட்டு டேனியல் போய்ட்டாரு. அவருக்கு காலில் ஆபரேஷன் நடந்திருக்கு. அந்த டைம்ல படத்தோட கிளைமாக்ஸ் காட்சி திரும்ப வேற மாதிரி எடுத்தா நல்லா இருக்குன்னு யோசிச்சு ரஞ்சித் என்கிட்ட சொன்னாரு.

சீயான் விக்ரமின் தங்கலான் பட அப்டேட் கொடுத்த டேனியல் கால்டகிரோன்,daniel  caltigrone at chiyaan vikram in thangalaan movie

ஞானவேலும் அதுக்கு ஓகே சொல்லிட்டாரு. நானும் ஓகே சொல்லிட்டேன். அந்த டைம் தான் டேனியல் ஆபரேஷன் காலோட வந்தாரு. அவரும் நான் பண்றேன் ஓகே சொல்லிட்டாரு. ஏற்கனவே நடிச்சு முடிச்சு சண்டைக்காட்சியை டேனியல் ஆப்ரேஷன் செய்த காலோட அப்படியே பண்ணாரு. அவரு வலியில் துடிச்சாரு. ஆனாலும் கஷ்டப்பட்டு நடித்து கொடுத்திருக்கிறார். படத்துல ஒவ்வொருத்தரும் ரொம்ப இம்போர்ட்டண்ட் கொடுத்து நடிச்சிருக்காங்க என பேசி உள்ளார்.

தங்கலான் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு | Thangalan film new poster release