ஒவ்வொரு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்ல வேண்டும் போன்ற எந்த அலைச்சலும் இல்லாமல் எளிதில் ஏடிஎம் மூலமாக பணம் எடுத்து விடுகிறார்கள். வங்கிகள் போல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமில்லாமல் 24 மணி நேரமும் ஏடிஎம்களில் பணம் கிடைக்கின்றது. இந்த நிலையில் வங்கிக்கு போகாமல் பணம் எடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளன. பயோமெட்ரி கடையாளத்தை பயன்படுத்தி ஆதார் ஏடிஎம்கள் மூலம் எளிதில் பணப்பரிவினை செய்து கொள்ள முடியும்.

இதற்கு உங்கள் ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைத்து இருப்பது அவசியமாகும். ஏடிஎம்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்து கொண்டு ஆதார் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம். வாடிக்கையாளர்களுக்குவீட்டிலிருந்து கொண்டே பணம் டெலிவரி செய்வது தான் இந்தியா பேமெண்ட் வங்கியின் சிறப்பு அம்சமாகும். இந்த சேவையில் உள்ளூர் தபால்காரர் வீட்டிற்கு வந்து பணத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்குவார்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் மைக்ரோ ஏடிஎம் மூலம் தபால்காரர் வீட்டிற்கு வருவார். இதனைத் தொடர்ந்து பயோமெட்ரி அடையாளத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்டவரின் அடையாளம் சரிபார்க்கப்பட்ட பின்னர் தபால்காரர் பணம் செலுத்துவார். பிறகு வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும். இதற்காக தனியாக எதுவும் கட்டணம் செலுத்த வேண்டாம். ஒரு பரிவர்த்தனை செய்ய அதிகபட்ச வரம்பு 10000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
