Categories: CINEMA

விக்ரமின் அடுத்த படத்தில் வில்லனாக களமிறங்கும் நடிப்பு அரக்கன்.. அப்போ FANS-க்கு செம்ம ட்ரீட் இருக்கு..

நடிப்பின் நாயகன் ஆன விக்ரம் அவர்களுக்கு அன்னியன் படத்திற்கு அப்புறம் எந்த படமும் இப்ப வரை அவருக்கு சரியாக போகவில்லை, இயக்குனர் அமைந்தாலும் கதை அமையாது கதைய அமைந்தாலும் இயக்குனர் அமையாது, தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சியான் 62 படம் குறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்க துவங்கிவிட்டனர். தங்கலான் படத்தில் சுதந்திர freedom of KGF மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதையை pa ரஞ்சித் உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் வித்தியாசமான இருவேறு கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ள நிலையில் அவரது லுக் போஸ்டர்கள் மிரட்டலாக வெளியாகின.


இந்நிலையில் விக்ரமின் அடுத்தப்படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர். சாக்லேட் பாய் சித்தார்த்தின் அவர்களின் நடிப்பில் வெளியான சித்தா படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கிய சு அருண்குமார் இயக்கத்தில் சியான் 62 படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. G.V பிரகாஷ் இசையமைத்துவரும் இந்தப் படத்தை A.H.R பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியான நிலையில், இப் படத்தில் விக்ரம் அவர்களை பழமையான கிராமத்து மண்வாசனை வீசும் கதாபாத்திரத்தில் உள்ளார்.

#image_title

நீண்ட நாள் பிறகு நடிகர் விக்ரம் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். என் காதல் கண்மணி என்ற படத்தில் இவரது திரைப்பயணம் துவங்கினாலும் இவருக்கு பாலாவின் இயக்கத்தில் சேது படம் சிறப்பான அடையாளத்தை கொடுத்தது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் உள்ளிட்ட பல விஷயங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நிலையில், சேது படத்தை தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்தி காட்டினார். ஒரு படத்திற்காக இவ்வளவு கஷ்டப்பட முடியுமா என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பாக மக்களிடையே வரவேற்பை கொடுத்தது.

இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்தப் படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் KGF மக்களின் வாழ்க்கையை மையமாக இந்தப் படம் அமைந்துள்ளது. படத்தில் இருவேறு கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ள நிலையில், அவரது லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், பல்வேறு பட நிகழ்ச்சி விழாக்களை படம் சந்தித்து வருகிறது.


இந்தப் படத்தை தொடர்ந்து சியான் விக்ரம் 62 படம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா ஆகிய படங்களை இயக்கி தமிழ் திரை உலகின் மக்கள் கவனத்தை தன் மேல் திருப்பிய பெற்றுள்ள சு.அருண்குமார் அவர்களின் இயக்கத்தில் சியான் 62 படத்தில் நடிக்க விக்ரம் ஒத்துக்கொண்டார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் கேட்டவண்ணம் உள்ளனர். இதனிடையே படத்தில் நடிகர் SJ சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விக்ரம் SJ சூர்யா காம்போவின் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago