#image_title
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பிரபு, பிரசாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.
படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிவடைந்ததால் தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக எச் வினோத் இயக்கும் தனது 69-ஆவது படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அதோடு சினிமாவில் இருந்து விலகி அரசியல் ஈடுபடப் போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கி விட்டார். படத்தில் டிரெய்லர் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தளபதி விஜய் கோட் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு இரண்டாவது பாதியும் பிரமாதமாக அமைய வேண்டும் என கண்டிஷன் போட்டு இருந்தார். இந்த நிலையில் முழு படத்தையும் பார்த்த விஜய் வெங்கட் பிரபுவிடம் சொன்ன வார்த்தை இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
படத்தை பார்த்த விஜய் வெங்கட் பிரபுவிடம் கலக்கிட்ட.. அவசரப்பட்டு நான் ஓய்வை அறிவித்துவிட்டேன். அப்படி இல்லன்னா இன்னொரு படம் உன் கூட பண்ணியிருக்கலாம் என வெங்கட் பிரபுவிடம் கூறினாராம். இதனை கேட்டு வெங்கட் பிரபுவும் பட குழுவினரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
கோர்ஜி கும்பலைச் சேர்ந்த இளம் சுட்டிகளான ஆரியன் சிந்து மற்றும் சத்யம் கடியான், ஹரியானா நாட்டுப்புற பாடகர் அங்கித் பாலியன்…
சமூக வலைத்தளங்களில் கோடாரி மற்றும் வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவரைத் தாக்கப் பாயும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…
காதலில் விழுந்தவர்கள் செய்யும் வேடிக்கையான குளறுபடிகளுக்கு என் நண்பன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவமே சிறந்த உதாரணம். அவனுக்குக் காரம்…
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அழுகிய…
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…
சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…