“திருவிழா முடியட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”… மாயமானதாக நாடகமாடிய காதலன்… 7 மாத கர்ப்பிணியை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்…!!

Spread the love

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அழுகிய பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். கொலையுண்டவர் கருங்குள்ளன் வட்டம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான பட்டதாரிப் பெண் கோகிலா என அடையாளம் காணப்பட்டுள்ளது. திருமணமாகாத அப்பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கோகிலாவின் கர்ப்பத்திற்குக் காரணமான பக்கத்து ஊரைச் சேர்ந்த அம்மாசி என்பவரிடம் போலீசார் முன்னர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, திருவிழா முடிந்ததும் அவரைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து கோகிலாவைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அம்மாசி, சில நாட்களுக்குப் பின் அவர் காணாமல் போய்விட்டதாக குடும்பத்தினரிடம் நாடகமாடியுள்ளார். தற்போது கோகிலா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gayathri

Recent Posts

என்னோட பேச மாட்டியா?… அதிகாலையில் வீடு புகுந்து இளம்பெண்ணை… மார்பில் கத்தியால் குத்திய கள்ளக்காதலன்… நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!

சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கஸ்தூரி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து…

8 minutes ago

ஐயோ… 13 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் அத்துமீறல்… அழுதுகொண்டே தாயிடம் கூறிய மாணவி… நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள…

13 minutes ago

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

2 மணத்தியாலங்கள் ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

2 மணத்தியாலங்கள் ago