“திருவிழா முடியட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”… மாயமானதாக நாடகமாடிய காதலன்… 7 மாத கர்ப்பிணியை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்…!!

By Gayathri on புரட்டாதி 4, 2026

Spread the love

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அழுகிய பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். கொலையுண்டவர் கருங்குள்ளன் வட்டம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான பட்டதாரிப் பெண் கோகிலா என அடையாளம் காணப்பட்டுள்ளது. திருமணமாகாத அப்பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கோகிலாவின் கர்ப்பத்திற்குக் காரணமான பக்கத்து ஊரைச் சேர்ந்த அம்மாசி என்பவரிடம் போலீசார் முன்னர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, திருவிழா முடிந்ததும் அவரைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து கோகிலாவைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அம்மாசி, சில நாட்களுக்குப் பின் அவர் காணாமல் போய்விட்டதாக குடும்பத்தினரிடம் நாடகமாடியுள்ளார். தற்போது கோகிலா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.