தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைவரும் பல முயற்சிகளை கையில் எடுத்து வருகின்றன. இப்படியான நிலையில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் இருக்கையில் அமர வேண்டும் என்று போராடி வருகின்றார். திமுகவை அரசியல் எதிரி எனவும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய விஜய் தற்போது வரை அந்த நிலையில் இருந்து பின்வாங்கவில்லை.
விஜய்க்கு ஆதரவு அதிக அளவில் இருந்தாலும் அரசியல் அனுபவம் இல்லை என்ற கருத்து தொடர்ந்து நிலவி வந்தது. இதனை நசுக்கும் விதமாக அமைந்த நிகழ்வுதான் செங்கோட்டையனின் சேர்க்கை. அவர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர்ந்தது விஜய்க்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது. மேலும் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள முக்கிய முகங்கள் பலரையும் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் சேர்ப்பேன் என்று செங்கோட்டையன் சபதம் எடுக்க அதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் மேலும் சில அதிமுக அதிருப்தி தலைவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். அந்த தலைவர்கள் யார் என கேட்டதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என அருண்ராஜ் பதிலளித்துள்ளார். மேலும் கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஜயின் தலைமையை ஏற்பவர்களுடனே கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…