பிரபல ஹீரோவின் மகனை வைத்து படம் இயக்கும் விஜய்யின் மகன் சஞ்சய்.. ஒரே படத்தில் 3 லெஜன்ட்களின் வாரிசு.!

By Ranjith Kumar on பங்குனி 6, 2024

Spread the love

விக்ரமின் மகனான துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா படம் மூலம் தமிழ் திரையுலகில் மாபெரும் நடிப்பை காட்டி மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதன் பின் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுடன் இணைந்து அப்பாவும் மகனும் ஆன துருவ் விக்ரம் மற்றும் விக்ரம் அவர்கள் நடுப்பில் வெளிவந்த மெகா பஸ்டர் படம் தான் மகான். இப்படத்தில் இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்கள்.

அதன் பின் துருவ் விக்ரம் அவர்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கத்தில் நேஷனல் கபடி விளையாட்டு வீரரான பாண்டியன் அவர்களின் வாழ்க்கை சரிதத்தை (Biopic) மையமாக வைத்து துரு விக்ரம் நடித்து வருகிறார். தற்போதைய படத்திற்காக துரு விக்ரமுக்கு கபடி பயிற்சி மிக கடுமையாக அளிக்கப்பட்டு வருகிறது. துருவ் கபடி பயிற்சி எடுக்கும் புகைப்படம் கூட தற்போது இணையத்தில் மிக வைரலாகியது.

   

மாரி செல்வராஜ இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் இப்படம் முடிந்து வெளியான பின், தமிழகத்தின் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் ஆன தளபதி விஜய் அவர்களின் மகன் ஜெய்சன் சஞ்சய் அவர்கள் இயக்கத்தில் துரு விக்ரம் அவர்கள் படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க ஜெய்சன் சஞ்சய்  இயக்கத்தில் துருவ் விக்ரம் மற்றும் சங்கர் மகளான அதிதி சங்கர் அவர்கள் நடிப்பில் வெளியாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

   

இப்படத்தில் இசை அமைப்பாளர் யார் என்றால்? மிகப் பிரம்மாண்ட இசை அமைக்கும் இசை புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்களின் மகனான ஏ.ஆர் அமின் அவர்கள் தான் சஞ்சய் அவர்களின் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மூன்று மாபெரும் லெஜென்களின் மகன்கள் இப்படத்தில் இணைந்து இருப்பதால், தயாரித்து திரைக்கு வரும் இப்படம் மாபெரும் வெற்றியை காணும் என்று பலரும் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.