என் புருஷன் குழந்தை மாதிரி, சொல்லாமலே போன்ற பல படங்களின் ஹீரோவாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் தான் “லிவிங்ஸ்டன்”. இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக மட்டுமல்லாமல் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் துணை நடிகராக நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் நடித்த பலப்படங்கள் பிளாக்பஸ்டர் அடித்துள்ளது, அந்த வரிசையில் சுந்தர புருஷன், அதே மனிதன், விரலுக்கேத்த வீக்கம், எங்களுக்கும் காலம் வரும், வல்லரசு, ஒரு ஊர்ல ராஜகுமாரி, மகளிர் மட்டும் என்று பல படங்கள் உள்ளது. தற்போது இவர் ஒரு தனியார் சேனல் பேட்டி ஒன்றில் தன் மனைவிக்கு நடந்த ஒரு துயர சம்பவத்தை தெரிந்து கொண்ட ரஜினி அவர்கள் எதிர்பாராத விதமாக செய்த உதவியை சொல்லி மனம் கலங்கி சூப்பர் ஸ்டார் அவர்களை பாராட்டி பேசி உள்ளார்.
லிவிங்ஸ்டன் ; ரஜினியுடன் லால் சலாம் படம் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், என் மனைவிக்கு Heart attack வந்து விட்டது, என் மனையை காப்பாற்ற பணம் இல்லாத சமயத்தில் ரஜினி இந்த விஷயத்தை கேள்விப்பட்டு சற்றும் யோசிக்காமல் நான் உன் சகோதரன் போல் அதனால் இந்த பணத்தை வாங்கிக் கொள் என்று, 15 லட்சத்தை தூக்கி கையில் கொடுத்தார், ஏற்கனவே கடன் அதிகமாக இருந்த சமயத்தில் நான் எப்படி அடைப்பேன் என்று யோசித்து கொண்டிருந்தேன், ஆனால் ரஜினி அவர்கள் நான் உன் சகோதரன் போல் அதனால் என்னிடம் வாங்க மாட்டியா என்று சொல்லி இந்த பணத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் கையில் கொடுத்தார்,
அதை வைத்து தான் என் மனைவியின் மருத்துவ செலவிற்கு பயன்படுத்திக் கொண்டேன்.
உதவி கிடைக்காமல் கஷ்டப்பட்ட சமயத்தில், சற்றும் யோசிக்காமல் ரஜினிகாந்த் அவர்கள் எனக்கு மாபெரும் ஒரு உதவியை செய்துள்ளார். இதை நான் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன். இவரின் புகைப்படத்தை தான் என் பூஜை அறையில் வைத்து சாமி போல் கும்பிட்டு வருகிறேன், எனக்கு வேறு எந்த சாமியும் இல்லை, ரஜினிகாந்த் மட்டும்தான் எனக்கு குலதெய்வம் என்று லிவிங்ஸ்டன் மனம் நெகிழ்ந்து ரஜினி அவர்களை பாராட்டி பேசி உள்ளார்.
Superstar ????
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 5, 2024
