“70 தொகுதிகள் + துணை முதல்வர் பதவி + 6 அமைச்சர்கள்” தளபதியின் மெகா ஆஃபர்… காங்கிரஸை வளைக்க தவெக போட்ட ஸ்கெட்ச்…!!

By Soundarya on மாசி 5, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தகவல், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகளைச் சூடாக்கியுள்ளது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்தாலும், திரைமறைவில் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸைத் தன் பக்கம் இழுக்க விஜய் தரப்பு வழங்கியுள்ளதாகக் கூறப்படும் “மெகா ஆஃபர்கள்” அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.

இந்தத் தகவலின்படி, தவெக உடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸிற்கு 70 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு துணை முதலமைச்சர் பதவி (DCM) மற்றும் 6 அமைச்சரவை இடங்கள் வழங்க விஜய் தரப்பு உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், அடுத்த மக்களவைத் தேர்தலில் 28 தொகுதிகளை காங்கிரஸிற்கு விட்டுத்தரவும் தவெக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் தங்களுக்குக் கிடைக்கும் இடங்களை விட இது பல மடங்கு அதிகம் என்பதால், காங்கிரஸ் இந்த வாய்ப்பை தீவிரமாகப் பரிசீலிப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.