குஷியோ குஷி..! இனி ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம்..? மத்திய அரசின் அதிரடி திட்டம்..!!

By Soundarya on மாசி 5, 2026

Spread the love

ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பதிலாக, இனி நேரடியாகப் பணம் வழங்கும் முறையைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இத்திட்டத்திற்காக ‘இ-ரூபி’ (e-RUPI) என்ற டிஜிட்டல் வவுச்சர் முறை பயன்படுத்தப்பட உள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் பயனாளியின் மொபைல் எண்ணிற்கு ஒரு டிஜிட்டல் வவுச்சர் அனுப்பப்படும். இதனைப் பயன்படுத்தி பயனாளிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கின் மூலம் பணமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வழங்கப்படும் தொகையின் அளவு மாறுபடும் எனக் கூறப்படுகிறது. பயனாளிகளுக்குத் தேர்வரிசை (Choice) வழங்குவதையும், விநியோக முறையில் நடக்கும் முறைகேடுகளைக் குறைப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. முதற்கட்டமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் இத்திட்டத்தைச் சோதனை முறையில் செயல்படுத்த அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.