வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதல்வர் மு.க. ஸ்டாலினின் சமீபத்திய கருத்துகளுக்குக் கடுமையானப் பதிலடி கொடுத்தார். ஊடகப் பேட்டி ஒன்றில் முதல்வர் “தன்னை எதிரியாக நினைப்பவர்களும் எனக்கு நண்பர்களே” எனக் கூறியதைச் சுட்டிக்காட்டிய விஜய், “அப்படி நான் உங்களுக்கு நண்பன் என்றால், கரூர் விவகாரத்தில் (கல் எறிதல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை) ஏன் என் மீது அபாண்டமாகப் பழியைப் போட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். தனக்கு எதிராக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துவதையும், அரசியல் ரீதியாகத் தன்னை முடக்க நினைப்பதையும் அவர் வெளிப்படையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், “உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இப்படிப் பேசியிருப்பீர்களா? எல்லாப் பிரச்சனைகளையும் நீங்களே செய்துவிட்டு, போகிற போக்கில் மேடைகளிலும் ஊடகங்களிலும் பொய்களைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என ஆவேசமாகத் தெரிவித்தார். முதல்வரின் ‘நட்பு’ குறித்த பேச்சுக்கும், அரசின் செயல்களுக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளைத் தோலுரித்துக் காட்டிய அவர், திமுக அரசின் அரசியல் அணுகுமுறையை ‘பொய் பிரசாரம்’ என்று கடுமையாக விமர்சித்து தனது உரையை நிறைவு செய்தார்.
