அப்படிப்போடு..! தவெக ஆட்சி அமைந்தால் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்… முதன்முறையாக விஜய் கொடுத்த வாக்குறுதி…!!

By Soundarya on மாசி 23, 2026

Spread the love

வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்றதோடு, ஒரு சுவாரஸ்யமான குட்டி கதையைச் சொல்லி தனது உரையைத் தொடங்கினார். தவெக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் வருவேன் என அவர் உறுதி அளித்தார். “என் சொந்தங்களாகிய உங்களை எல்லாம் சந்திக்க நான் வருவேன்” என அவர் நெகிழ்ச்சியுடன் கூறிய வாக்குறுதி, அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அரசியல் களம் குறித்துப் பேசிய விஜய், வரவிருக்கும் தேர்தலில் இரண்டே தரப்பிற்கு இடையேதான் உண்மையான போட்டி நிலவும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். “ஒன்று தீய சக்தியான திமுக, இன்னொன்று தூய சக்தியான தவெக” என்று அவர் முழங்கினார். இதன் மூலம் தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியாகத் தவெக உருவெடுத்துள்ளதை உறுதிப்படுத்திய அவர், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துத் தனது தேர்தல் போர் முழக்கத்தை வேலூர் மண்ணில் பதிவு செய்தார்.