போடு ரகிட ரகிட..! விஜய் கட்சியின் சின்னம் இதுதான்… லீக்கானது ரகசியம்…!!

By Soundarya on மார்கழி 20, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்திற்கு  வரும் 24-ம் தேதி ‘விசில்’ அல்லது ‘மோதிரம்’ சின்னம் ஒதுக்கப்படுவது உறுதியாகிவிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சின்னம் கிடைத்தவுடன் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள விஜய், இதற்காக மூத்த அரசியல் தலைவர் செங்கோட்டையன் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழலில் எந்த அணியிலும் இடம்பெறாமல் இருக்கும் பாமக, தேமுதிக, அமமுக மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்க செங்கோட்டையன் தரப்பு ஆயத்தமாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பலமான கூட்டணியை அமைக்க தவெக தீவிரம் காட்டி வருகிறது.