சட்ட விரோதமான சூதாட்ட செயலி வழக்கு… முடக்கப்பட்ட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களின் சொத்துகள் – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

By Elango on மார்கழி 20, 2025

Spread the love

சட்ட விரோத சூதாட்ட செயலி மூலம் 1000 கோடி ரூபாய் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அந்த சூதாட்ட செயலிக்கு ஆதரவாக விளம்பர படங்களில் நடித்து அந்த குற்றத்திற்கு உரிய பணத்தில் சொத்துக்கள் வாங்கியதாக சில கிரிக்கெட் வீரர்கள், சினிமா துறையினரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

இதைத்தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் ராபின் உத்தப்பா நடிகர் சோனு சூட் நடிகை சினேகா சர்மா திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மிமி சக்கரவர்த்தி வங்காள நடிகை அங்குஷ் ஹஸ்ரா, நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் தாயார் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.