வெளியானது ‘Thalapathy 68’ படத்தின் டைட்டில்.. PAN இந்தியா இல்ல.. Universal-யே திரும்பி பார்க்க வைக்குற டைட்டிலா இருக்கே..

By admin on மார்கழி 23, 2023

Spread the love

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை தொடர்ந்து, இப்போது நடித்து வரும் படம் விஜய் 68 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. அதாவது இப்போதெல்லாம் நடிகர்கள் எத்தனையாவது படம் என்ற அடிப்படையில் விஜய் 68, ரஜினி 170, கமல் 233, ஏகே 62 என தற்காலிகமாக பெயரிட்டுக்கொள்வது வழக்கமாகி விட்டது. பாதி படம் வரை படப்பிடிப்பு முடிந்த பின்போ, அல்லது படமே முடிந்த பின்போ படத்தின் டைட்டிலை அறிவிப்பது இப்போது தமிழ் சினிமாவில் பேஷனாகி விட்டது. அந்த வகையில் சமீபத்தில் கமல் நடிக்கும் மணிரத்னம் இயக்கும் படத்தின் பெயர் தக்லைப் என அறிவிக்கப்பட்டது. அதே போல் ரஜினி 170 படம் வேட்டையன் என்று அறிவிக்கப்பட்டது.

   

இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் விஜய் 68 படத்தின் டைட்டில் குறித்து அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். வரும் 31ம் தேதி மாலை 6 மணியளவில் படத்தின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையே பாஸ் என்ற டைட்டில் விஜய் படத்துக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை. விஜய் 68 படத்தின் பெயர் பாஸ் இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் அர்ச்சனா கல்பாத்தி, 2 நாட்களுக்கு முன் டிவிட் செய்து தெளிவுபடுத்தி இருந்தார். ஆனால் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் அவரது 68வது படத்தின் பெயர் இதுதான் என உறுதியாக தெரிய வந்துள்ளது.

   

 

அதாவது விஜய் நடித்து அடுத்து வெளிவரும் இந்த படத்தின் பெயர் கோட் என முடிவாகி உள்ளது. கோட் என்றால் (GOAT) என்ற ஆங்கில எழுத்துகளை முன்னிலைப்படுத்தி இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. GREATEST OFF ALL TIME (கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்) என்ற பெயரில் எல்லா விஷயத்திலும் சிறந்து விளங்குபவர் என்ற அர்த்தம் தரும் வகையில், சர்வதேச அளவில் ஒரு சிறந்த மனிதராக அவர் இந்த படத்தில் கதாபாத்திரத்தில் இருப்பார் என இந்த பெயர் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா படம் என்ற நிலையை தாண்டி சர்வதேச அளவில் ஒரு சிறந்த மனிதராக அவர் இருக்கிறார், இருப்பார் என்ற சொல்கிற அடிப்படையில் இப்படி ‘கோட்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்படி இருப்பினும் கோட் என்பது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.