தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு எதிராக முழுவீச்சில் களமாட தயாராகி வருகின்றார் விஜய்.
செப்டம்பர் 13ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பை தொடங்க திட்டமிட்டுள்ள அவர், மெகா பிளான் போட்டு வைத்துள்ளாராம். முதல் கட்டமாக 100 தொகுதிகளுக்குச் சென்ற தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகள், பெண்கள், தொழிலதிபர்களை சந்தித்து குறைகளை கேட்டறியவும் அவர் ஏற்பாடு செய்து வருகின்றார்.
