இந்தியாவில் மக்களுக்கு உதவும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தகுதிக்கு ஏத்தவாரு திட்டங்கள் உள்ளன. இதில் உங்களுக்கு எந்த திட்டத்தில் சேருவதற்கு தகுதி உள்ளது என்று பார்க்கலாம். உதாரணமாக சொல்லப்போனால் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜின் ஆரோக்கிய யோஜனா என்று திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் இலவச மருத்துவம் கொடுத்து வருகிறார்கள். பல லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தில் பயன் பெற்றும் வருகிறார்கள். ஆயுஷ்மான் அட்டையை பெற உங்களுக்கு தகுதி இருந்தால் பெற்று வைத்துக்கொள்ளுங்கள். ஆயுஷ்மான் அட்டையை வைத்திருந்தால் வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை நீங்கள் இலவச மருத்துவம் பெற்றுக் கொள்ளலாம். இந்த செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.
ஆயுஷ்மான் அட்டையை ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். https://pmjay.gov.in/என்ற செயலி மூலமாக விண்ணப்பித்து அட்டையை பெற்றுக் கொள்ளலாம். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர் csc அலுவலகத்திற்குச் சென்ற சம்பந்தப்பட்ட அதிகாரையை சந்தித்து உங்களுக்கும் தகுதி உள்ளதா என்று தெரிந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து ஆயுஷ்மான் அட்டையை விண்ணப்பிக்கலாம். ஆயுஷ்மான் அட்டையை விண்ணப்பிக்க ஆதார் அட்டை, இரண்டாவது ரேஷன் அட்டை, பிரதமர் அல்லது முதல்வர் தகுதி கடிதம், பாஸ்போர்ட் புகைப்படம், மொபைல் எண் போன்றவற்றை தேவைப்படும். ஆவணங்களை சமர்ப்பித்த ஆயுஷ்மான் அட்டையை வாங்கிக் பயன்பெறுமாறு மத்திய, மாநில அரசு கேட்டுக்கொள்கிறது.
