தமிழகத்தில் தேர்தல் களம் நொடிக்கு நொடி பரபரப்பாக இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பயணம் 2026 தேர்தல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளது. அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை நிலவிவரும் நிலையில் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் கட்சிக்கு இது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் கட்சியில் இல்லாதவர்களையும் வேட்பாளர்களாக களமிறக்க விஜய் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. அதாவது தேர்தலில் போட்டியிட TVK வினருக்கு 40% தொகுதிகளையும், துறை சார்ந்த ஆளுமைகள், பிரபலங்கள், சமூகநல செயற்பாட்டாளர்களுக்கு 60% தொகுதிகளையும் ஒதுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்காக மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்களை தேடும் பணியில் கட்சியினர் இறங்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
