தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் நொடிக்கு நொடி பரபரப்பாகவே உள்ளது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தனது ஆட்சியை தக்க வைப்பதற்காக கூட்டணியை பலப்படுத்திக் கொண்டு வெற்றியை பெறுவதற்கு பல வியூகங்களை வகுத்து வருகிறார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெற்றி வாகை சூட விஜய் பலகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் அடுத்தடுத்து இணைந்து வருகின்றனர். அதன்படி நேற்று அதிமுக கடலூர் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் அபி பத்மாவதி உட்பட 100க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களை வரவேற்று தமிழக வெற்றி கழகம் உறுப்பினர் அட்டையை கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் EMR.S விஜய் வழங்கினார்.
