தமிழ்நாடு ஒரு முரட்டு காளை… அதை அடக்கப்போகும் சிறுவன் யார் தெரியுமா..? வேலூரில் விஜய் சொன்ன ‘மாஸ்’ குட்டி ஸ்டோரி..!!

By Soundarya on மாசி 23, 2026

Spread the love

வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆற்றிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது உரையை ஒரு சுவாரஸ்யமான குட்டி கதையுடன் தொடங்கிய அவர், ஒரு மக்கள் கூட்டத்தின் நடுவே ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை நிற்பதாகக் கூறினார். சீறிப் பாயும் அந்த காளையை அடக்க யாருக்கும் துணிச்சல் வரவில்லை என்றும், வீரத்துடன் முன்னே சென்ற ஒருசிலரும் அந்தக் காளையிடம் தோற்றுப் பின்வாங்கியதாகத் தனது கதையில் குறிப்பிட்டார்.

அந்த முரட்டு காளையை எவராலும் அடக்க முடியாது என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில், ஒரு சிறுவன் துணிச்சலுடன் முன்னே வந்ததாக விஜய் கூறினார். அவன் மற்றவர்களைப் போல வன்முறையையோ அல்லது பலத்தையோ பயன்படுத்தாமல், மிக எளிமையாக சில புற்களைக் காளையிடம் நீட்டினான். அந்த அன்பிற்கும், அமைதியான அணுகுமுறைக்கும் கட்டுப்பட்ட அந்த முரட்டு காளை, உடனடியாக அடங்கி அந்தச் சிறுவனுக்குப் பணிந்தது என்று கதையை முடித்தார்.

   

இந்தக் கதையின் உட்பொருளை விளக்கிய விஜய், அந்த அடங்காத முரட்டு காளைதான் “தமிழ்நாடு” என்றும், அந்தச் சிறுவன் தான் “தமிழக வெற்றிக் கழகம்” என்றும் குறிப்பிட்டார். அதிகாரம் அல்லது பலத்தால் சாதிக்க முடியாத மாற்றங்களை, அன்பாலும் சரியான அணுகுமுறையாலும் தவெக சாதிக்கும் என்பதை அவர் இதன் மூலம் தொண்டர்களுக்கு உணர்த்தினார். இந்த உருவகக் கதை அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது