“கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிர் போயிடும்” ஒரு புடவைக்காக மகனின் உயிரை பணயம் வைத்த தாய்… 4-வது மாடியிலிருந்து கயிற்றில் கட்டித் தொங்கவிட்ட பகீர் வீடியோ..!!

By Soundarya on மாசி 23, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், விழுந்த புடவையை எடுப்பதற்காகத் தாய் ஒருவர் தனது மகனின் உயிரைப் பணயம் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்காவது மாடி பால்கனியிலிருந்து கீழே உள்ள மூன்றாவது மாடி பால்கனியில் புடவை விழுந்ததால், அதை எடுக்க அந்தத் தாய் ஒரு விபரீத முடிவை எடுத்தார். தனது மகனை ஒரு புடவையால் கட்டி, நான்காவது மாடியிலிருந்து மூன்றாவது மாடிக்கு ஆபத்தான முறையில் தொங்கவிட்டு கீழே இறக்கியுள்ளார்.

சிறுவன் கீழே இறங்கி புடவையை எடுத்தவுடன், மீண்டும் அதே புடவையைப் பயன்படுத்தித் தாய் அவனை மேலே இழுத்துள்ளார். இந்த முழுச் சம்பவத்தையும் எதிர் வீட்டில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது. “ஒரு புடவைக்காகத் தன் மகனின் உயிரையே இவ்வளவு அலட்சியமாகப் பந்தயத்தில் வைப்பதா?” எனப் பலரும் அந்தத் தாயைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அந்த அடுக்குமாடி குடியிருப்பின் நலச் சங்கம் (RWA) அந்தப் பெண்ணிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.