“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

By Devi Ramu on சித்திரை 21, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான கடைசித் தருணம் இது என அதிரடியாக முழக்கமிட்டார். தற்போதைய அரசு வரி உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் கடன் சுமை என மக்களின் துன்பங்களை மட்டுமே அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களுக்கு இந்தப் பொதுத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், வாக்காளர்களுக்குப் பணமழை பொழிந்தாலும் தவெக-வின் ‘விசில்’ புரட்சி அதை முறியடிக்கும் என்றும் அவர் தன்னம்பிக்கையுடன் பேசினார்.

தனது அரசியல் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்த விஜய், தனது கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் மீண்டும் தெளிவுபடுத்தினார். மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் தான் நூறு சதவீதம் உறுதியாக இருப்பதாகவும், எம்மதமும் சம்மதம் என்பதே தனது தாரக மந்திரம் என்றும் அவர் குறிப்பிட்டார். “சிங்கம் என்றுமே சிங்கம்தான், தனியாக வந்தாலும் எதிரிகளுக்குத் தண்ணி காட்டும்” என அவர் பேசியது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் யாராலும் சீர்குலைக்க முடியாது என்றும் அவர் தனது நிறைவுப் பிரசாரத்தில் தெரிவித்தார்.