தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார். அடுத்தடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி உள்ளார். சமீபத்தில் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் அரசியல் பணிகள் வேகம் எடுத்துள்ளது.
விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதில் கூட்டணி தொடர்பாக முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றி விஜய் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை செய்யும் விஜய் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் தேர்தல் பரப்புரை உள்ளிட்டவை குறித்த முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் நடந்த ஜூல்ஜிபி கண்காட்சி விழாவில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது உரையை நிறைவு…
சென்னை மணலி சி.பி.சி.எல். நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் குழந்தையுடன் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்ட இளம்பெண்ணைப் போலீசார் பத்திரமாக…
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு மூத்த டாக்டர்…
ஹைதராபாத் கே.பி.எச்.பி பகுதியில் தங்கள் குழந்தையைக் கொன்றுவிட்டுப் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்குள் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களும் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்…
அகமதாபாத் கோமதிபூர் பகுதியில் நவம்பர் 10-ஆம் தேதி இரவு சிறுவர்களுக்கு இடையிலான சண்டையைத் தடுக்க முயன்ற ஒருவர் மீது கொடூரமான…