அந்த ஒரு விஷயத்தை நினைச்சி தான் குழந்தை பெத்துக்கல… பல வருடங்களுக்கு பின் மனம் திறந்த நடிகை விஜயசாந்தி..!

By Soundarya on மார்கழி 18, 2024

Spread the love

இயக்குனர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயசாந்தி. இவர் தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு போட்டி போட்டு நடித்தவர். வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படம்  மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் விஜயசாந்தி.  இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் 1996 ஆம் வருடம் அதிமுகவுக்கு ஆதரவளித்து நட்சத்திர பேச்சாளராகவும் இருந்தார் .

   

அதன் பிறகு பிஜேபியில் இணைந்தார். அதன் பிறகு 2004 ஆம் வருடம் பிஆர்எஸ் கட்சிக்கு தாவினார்.  தற்போது காங்கிரஸ் இருக்கிறார். இவர் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்ததில், தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் தனிப்பட்ட விஷயங்களை குறித்து பகிர்ந்துள்ளார். அதில் திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாதது குறித்து பேசிள்ளார்.

   

#image_title

 

குழந்தை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தை பெத்துக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுவாள். எனக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும். ஒரு ஸ்டேஜ்ல அந்த விஷயத்தை பத்தி நான் ரொம்ப யோசித்தேன். ஆனால் எங்கேயோ ஒரு இடத்தில் எனக்கு குழந்தைகள் இருந்தால் தெலுங்கானாவில் அதை வைத்து என்னை பிளாக்மெயில் பண்ணுவாங்கன்னு சந்தேகம் வந்தது.

ஏன்னா அது சாதாரண விஷயம் கிடையாது. ஒரு மாநிலத்தில் அப்ப இருந்த சூழ்நிலையில் ஒரு விஷயத்துக்காக நாம சண்டை போட்டுட்டு இருக்கும்போது எது வேணாலும் பண்ணுவாங்கன்னு தோணுச்சு. ஆண்களுக்கு இது ஓகே. ஆனா பெண்களுக்கு கொஞ்சம் டப் .இந்த விஷயத்தை பற்றி ரொம்ப யோசிச்சு இது வேற எங்கேயோ போய் முடியும்னு எனக்கு தோணுச்சு. இதனால் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவு பண்ணிட்டேன். மக்கள்தான் என்னுடைய குழந்தைகளை நினைத்து இந்த விஷயத்தை என்னுடைய கணவரிடமும் சொன்னேன் அவரிடம் ஏற்றுக்கொண்டார் என்று பேசி உள்ளார்.