இப்போ இவ்ளோ டெக்னாலஜி வந்துடுச்சு… ஆனாலும் ராஜபார்வைல நாங்க பண்ண ஒரு ஷாட்ட இப்பவும் பண்ண முடியாது… இயக்குனர் பெருமிதம்!

By vinoth on மார்கழி 18, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

கமல்ஹாசனின் போட்டியாளரான ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

   

   

கமல்ஹாசன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் முதலாகத் தயாரித்த படம் என்றால் அது ராஜபார்வைதான். கமல்ஹாசனின் 100 ஆவது படம் ராஜபார்வை. அதனால் அந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த படத்தில் பார்வையற்ற இசைக் கலைஞராக கமல் நடித்திருந்தார். நல்ல பாடல்கள், திரைக்கதை மற்றும் நடிப்பு இருந்தும் அந்த படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் இப்போது அந்த படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

சமீபத்தில் அந்த படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவுக்கு கமல்ஹாசன் ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அதில் பேசியிருந்த சிங்கீதம் சீனிவாசராவ் “ இப்போ இவ்ளோ டெக்னாலஜி வந்துடுச்சு.. ஆனாலும் நாங்க ராஜபார்வை படத்துல எடுத்த ஒரு ஷாட்ட எடுக்க முடியாது. ஒரு ஷாட்டில் மாதவியை லோ ஆங்கிளில் எடுக்கவேண்டும். அதற்கான இடவசதி இல்லை. அதனால் ஒரு போர்வையில் கேமராவை வைத்து அதை இழுத்துதான் அந்த ஷாட்டை எடுத்தோம்.” எனக் கூறியுள்ளார்.