Categories: சினிமா

கவுண்டமணி சார் கூட நடிக்கவே முடியாது… ரொம்ப கஷ்டப்படுவேன் –நடிகை விஜயசாந்தி பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் 90 களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்தான் விஜயசாந்தி. தெலுங்கு சினிமாவில் ஆக்‌ஷன் கதாநாயகியாக சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த அவர் முன்னணிக் கதாநாயகர்களுக்கு இணையான மார்க்கெட்டை வைத்திருந்தார்.

இதன் காரணமாகவே அவர் அரசியலுக்கும் வந்தார். ஆனால் அரசியலில் அவரால் பெரியளவில் சாதிக்க முடியவில்லை.  அதன் பின்னர் சினிமாவிலும் அவர் பெரிதாக நடிக்கவில்லை.

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட விஜயசாந்தி தென்னிந்திய தமிழ் சினிமாவில்”கல்லுக்குள் ஈரம்” என்னும் படம் மூலம் தனது பயணத்தைத் தொடங்கினார். அந்த படத்துக்காக பாரதிராஜா அவரை ஒரு போட்டோவை பார்த்துதான் தேர்வு செய்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் தெலுங்கு ஆகிய அணைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

#image_title

இதில் தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆனார். அதன் பின்னர் ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்படத்தில் அவரை எதிர்த்து போட்டிபோடும் ஆதிக்கம் செலுத்தும் மனைவியாக நடித்து மிரட்டியிருப்பார். அந்த படத்தில் அவர் ரஜினி, கவுண்டமணி மற்றும் விஜயசாந்தி ஆகியோர் நடித்த ஒரு நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியில் நடித்த அனுபவத்தை விஜயசாந்தி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அதில் “மன்னன் படத்தில் அந்த தியேட்டர் காட்சியில் நடிக்கும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதில் ரஜினிசாரின் கெட்டப்பும், கவுண்டமணி சாரின் வசனங்களும் எனக்கு சிரிப்பை வரவழைத்தன. அவர் ஒவ்வொரு முறை வசனம் பேசும்போதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கஷ்டப்பட்டுதான் நடித்தேன். கவுண்டமணி சார் என்னுடைய முதல் படத்திலும் நடித்திருந்தார். அவரோடு நடித்தது சிறப்பான அனுபவம்” எனக் கூறியுள்ளார்.

 

vinoth

Recent Posts

“அக்கா வீட்டிற்கு சென்ற மனைவி….” தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொடூரம்…. கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை… பகீர் சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…

8 minutes ago

மரத்தின் மீது மோதி கவிழ்ந்த பள்ளி வேன்…. அலறி துடித்த பள்ளி மாணவர்கள்…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…

1 மணத்தியாலம் ago

“உங்க ஸ்பேஸ் டெக்னாலஜியை பாருங்க…” நடுரோட்டில் மெகா பள்ளம்… பைக்குடன் பாய்ந்த டெலிவரி பாய்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…

1 மணத்தியாலம் ago