முன்னணி நடிகரான விஜயகுமாரின் பேரனும், ஆகாஷ் வனிதா தம்பதியினரின் மகனுமான ஸ்ரீஹரி ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். அவர் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீ ஹரிக்கு ஜோடியாக பிரபு சாலமனின் மகள் நடிக்கிறார். இந்த படத்திற்கு மாம்போ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு விஜயகுமார் பேசியதாவது, சிறுவயதிலேயே ஸ்ரீஹரி எப்படி வாழ வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொண்டார்.
பள்ளியில் படிக்கும் போது அவனை லீடராக செலக்ட் பண்ணாங்க. ஆனா ஸ்கூல் பிரின்சிபால் அவனை லீடர் ஆக்கவில்லை. இது குறித்து ஸ்ரீஹரி கூறியவுடன் நான் பள்ளிக்கு சென்று பேசினேன். அதன் பிறகு அவனை லீடராக ஆக்கினார்கள். அவன் 12 ஆம் வகுப்பு முடிக்கும் போது ஆண்டுவிழா நடந்தது. அப்போது ஸ்ரீஹரியை போல லீடர் சிறப்பாக செயல்பட வேண்டும் என பாராட்டி பேசினார்கள். அவன் 12-ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டான். அதன் பிறகு லண்டனில் மூன்று வருடம் இயக்கம், நடிப்பு, தயாரிப்பு ஆகியவற்றை படித்து முடிந்து விட்டான்.
பின்னர் ஊருக்கு வந்த ஸ்ரீஹரியிடம் என்ன செய்யப் போறேன்னு கேட்டேன். நான் ஏதாவது உதவி செய்யணும்மான்னு கேட்டேன். அதுக்கு ஸ்ரீஹரி நானே பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் உதவி செய்ய வேண்டாம் என கூறினான். அவனும் பல இயக்குனர்களை சென்று பார்த்தான். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருநாள் எனது நெருங்கிய நண்பரான ரஜினிகாந்தை சந்திக்க ஸ்ரீஹரியுடன் சென்றேன். அவரிடம் நடந்துவற்றையெல்லாம் கூறி என்ன செய்யலாம் என அறிவுரை கேட்டேன். அவரும் ஸ்ரீஹரியுடன் பேசினார். பின்னர் ஸ்ரீஹரி நடிக்க ஆசைப்படுகிறார். ஒரு நல்ல இயக்குனர் நல்ல தயாரிப்பு நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள் என ரஜினிகாந்த் கூறினார்.
உடனே நான் பிரபு சாலமன் படம் என்றாலே நன்றாக இருக்கும். பிரபு சாலமனும், ஸ்ரீஹரியின் அப்பா ஆகாசும் நெருங்கிய நண்பர்கள். ஏற்கனவே ஆகாஷ் பிரபு சாலமனின் படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீஹரி பற்றியும் ஆகாஷ் பிரபு சாலமனிடம் கூறியுள்ளார். அவரது படத்தில் ஸ்ரீஹரியை நடிக்க வைக்கலாமா என கேட்டு, ஏற்கனவே அவர்கள் சொன்ன சிங்கத்தின் கதை பற்றியும் கூறினேன். அவரும் பிரபு சாலமன் நல்ல இயக்குனர், முயற்சி பண்ணி பாருங்க, கதை சொன்னவுடன் சூப்பராக வரும் அதே எடுங்கள் என கூறினார். பின்னர் ஸ்ரீஹரியிடம் நடிப்பு என்றால் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாக பத்து நிமிடம் பேசினார் என விஜயகுமார் கூறியுள்ளார்.