சமீபகாலமாகவே அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி இன்று பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸ் குவிக்கப்பட்டு அங்கு சோதனை நடைபெற்றது. ஆனால் அது வெறும் புரளி என்பது சோதனையில் தெரிய வந்தது. அதேசமயம் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் வீடுகளுக்கும் இன்று ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
