Connect with us

என் கட்சியில் சேராதே என்று சொன்ன கேப்டன் விஜயகாந்த்… மனம் நெகிழ்ந்த ரமேஷ் கண்ணா…

CINEMA

என் கட்சியில் சேராதே என்று சொன்ன கேப்டன் விஜயகாந்த்… மனம் நெகிழ்ந்த ரமேஷ் கண்ணா…

ரமேஷ் கண்ணா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். பல துணை மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார் ரமேஷ் கண்ணா. ஆர் எஸ் மனோகரின் நாடக குழுவில் தனது ஐந்து வயது முதல் 10 வயது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரமேஷ் கண்ணா. அப்போது இந்திய குடியரசு தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களால் பாராட்டையும் பெற்றவர் ரமேஷ் கண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

   

ஆரம்பத்தில் ரமேஷ் கண்ணா காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், விக்ரமன், கே எஸ் ரவிக்குமார் ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1998 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் தான் நடிகர் கார்த்திக்கு நகைச்சுவை நண்பராக ரமேஷ் கண்ணாவை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார் விக்ரமன். அதிலிருந்து நகைச்சுவை நடிகராகவே தனது பயணத்தை சினிமாவில் தொடர்ந்தார் ரமேஷ் கண்ணா.

   

படையப்பா, ஃபிரண்ட்ஸ், உன்னை நினைத்து, வில்லன், துள்ளுவதோ இளமை போன்ற திரைப்படங்களில் தன் அபாரமான நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ரமேஷ் கண்ணா. இது தவிர முனி மற்றும் நம் நாடு ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ஆதவன் திரைப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார் ரமேஷ் கண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ரமேஷ் கண்ணா விஜயகாந்த் அவர்களை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியது என்னவென்றால் நான் அண்ணன் விஜயகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்தவுடன் உங்கள் கட்சியில் நான் சேருகிறேன் அண்ணா என்று அவரிடம் போய் கூறினேன். அதற்கு அவர் வேண்டாம் ரமேஷ் என் கட்சில நீ சேர வேண்டாம் நீ என்கூட சேர்ந்துட்டேனா உன்னை நடிக்க விட மாட்டாங்க. அதனால நீ நல்லா நடிச்சு நல்ல இடத்துக்கு வரணும். உனக்கு என்ன உதவி வேணாலும் அண்ணன்கிட்ட கேளு நான் செய்யுறேன் அப்படின்னு கூறியிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.

அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் உதவி இயக்குனர்கள் எல்லாமே மிகவும் கஷ்டப்படுவார்கள், சாப்பாடு கூட ஒரு சில நேரம் கிடைக்காது. அப்படி ரமேஷ் கண்ணா சாப்பாடு இல்லாத நேரத்தில் எல்லாம் விஜயகாந்த் அவர்கள் வீட்டிற்கு செல்வாராம். அப்போது விஜயகாந்த் அவர் என்ன சாப்பிடுவாரோ அதே உணவை இயக்குனர்களுக்கெல்லாம் உணவளித்து இருக்கிறார். வீட்டில் மட்டுமல்லாமல் அவர் பட சூட்டிங்ளும் இதே தான் நடக்குமாம். அப்படிப்பட்ட மனித உருவில் தெய்வமாக வாழ்ந்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் என்று கூறியிருக்கிறார் ரமேஷ் கண்ணா.

More in CINEMA

To Top