CINEMA
தேசிய விருது நடிகையுடன் இணையும் தனுஷ்.. அந்த படத்துல ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்குதாம்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இந்த நிலையில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தின் மூலமாக இயக்குனராகவும் வெற்றி கண்டார் தனுஷ். இந்த படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ராயன் திரைப்படம் வெற்றியடைந்தது. இந்த நிலையில் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் அனிகா சுரேந்தர், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் தான் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அப்போது திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுசுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அவரே கதை இயக்குகிறார்.
அதுவும் சிறந்த படமாக இருக்கும் என நித்திய மேனன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். தனுஷ் நித்யா நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீசான திருச்சிற்றம்பலம் படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனனின் நடிப்பு எதார்த்தமாக ரசிகர்களை கவரும் விதமாக இருந்தது. தற்போது மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.