Categories: சினிமா

படம் ஓடாது என்று தெரிந்த உடனே விஜயகாந்த் செய்த காரியம்.. அதான்டா எங்க கேப்டன்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜயகாந்த். இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். ஏராளமான ஃபிலிம் ஃபேர் விருதுகள், தமிழக அரசின் விருதுகள், கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை விஜயகாந்த் தன்வசம் ஆக்கியுள்ளார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி கட்சியின் நிறுவனத் தலைவராக பொறுப்பேற்றார். வைதேகி காத்திருந்தாள், பூந்தோட்ட காவல்காரன், அம்மன் கோவில் கிழக்காலே, சின்ன கவுண்டர், ஆனஸ்ட் ராஜ், புலன் விசாரணை, வானத்தைப்போல, தவசி, ரமணா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார்.

தனது உணர்ச்சி பூர்வமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சினிமாவில் விஜயகாந்த் போல நல்ல உள்ளம் படைத்தவர்கள் அரிதாகவே இருக்கின்றனர். சினிமாவிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பலரது வாழ்க்கையில் விஜயகாந்த் ஒளியேற்றி வைத்துள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். அந்த படத்தின் ஷூட்டிங் மூன்றாவது நாள் போய்க்கொண்டிருந்த போதே படம் ஓடாது என விஜயகாந்த்துக்கு தெரிந்து விட்டது.

அவர் பட குழுவினரை அழைத்து கதையின் போக்கு வேறு எங்கோ செல்கிறது. இந்த படம் ஓடாது என கூறியுள்ளார். மேலும் தான் பேசிய சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். அவர் கூறியதை கேட்டு பட குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். சில நாட்கள் கழித்து படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. விஜயகாந்த் நினைத்தபடி அந்த படம் சரியாக ஓடவில்லை. இதனால் தான் பேசியபடி பாதி சம்பளத்தை மட்டும் தான் விஜயகாந்த் வாங்கினாராம். இந்த தகவலை பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

admin

Recent Posts

50 ஆண்டுகால திராவிட சகாப்தம் காலி… விஜய்க்கு ஓட்டு விழுந்த காரணமே வேறு… டெல்லியை அதிரவைத்த அந்த டுவிஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை மாறி…

1 minute ago

“மெஜாரிட்டி இல்லை.. 100+ எதிர்க்கட்சிகள்”… விஜய்க்கு காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை’… 2006-ல் கருணாநிதிக்கு ஏற்பட்ட அதே சிக்கல்…!

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்',…

8 minutes ago

‘ஆட்சி அமைத்தாலும் இது இல்லைனா கஷ்டம்’… விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரர் பி.ஆர். சுந்தர் உடைத்த உண்மை… அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி 'தமிழக வெற்றி கழகம்' (தவெக)…

19 minutes ago

“நண்பனுக்காக போன் செய்த அஜித்” – விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ‘தல’ கொடுத்த சர்பிரைஸ்…!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…

27 minutes ago

50 ஆண்டுகால திராவிட அரசியலை ஓரம் கட்டிய விஜய்… சைலண்ட்டாக சம்பவம் செய்த தளபதி… தமிழக அரசியலில் மெகா புரட்சி..!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…

29 minutes ago

பாத்திரம் கழுவும் பெண் டூ MLA..! 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… மாபெரும் புரட்சி செய்த பிரதமர் மோடி..!!

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…

35 minutes ago