தமிழ் சின்னத்திரையில் 90களில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் கல்யாண பரிசு. சன் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியலின் நாயகிக்காகவே இந்த தொடரை ரசிகர்கள் தவறாமல் பார்த்து வந்தனர். சினிமா ஹீரோயினி அளவுக்கு கல்யாண பரிசு காயத்ரியை அனைவரும் கொண்டாடினர். அவர்தான் நேகா கவுடா. இவர் இறுதியாக விஜய் டிவியில் பாவம் கணேசன் என்ற சீரியலில் குணவதி ஆக நடித்திருந்தார். கர்நாடகாவை சேர்ந்த இவருடைய தந்தை கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்.
பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருடைய தங்கை சோனு கவுடாவும் நடிகை தான். 10 ஆம் வகுப்பு படிக்கும் போது தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் நேகா இருந்துள்ளார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மாடலிங் செய்து வந்தார். இவர் முதன்முதலில் கன்னட சீரியலில் 2013 ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் அந்த முதல் சீரியலிலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சீரியலில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு நேகா தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கடந்த ஜூன் மாதம் பகிர்ந்திருந்தார். இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் நேகா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவருடைய பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அழகிய புகைப்படத்தை சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் திராவிட அரசியலின் அரைநூற்றாண்டு கால வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தவெக (தமிழக வெற்றி கழகம்) பெரும்பான்மையான…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன. எவ்வித அரசியல் முன் அனுபவமும் இன்றி,…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் திமுகவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது…