CINEMA
“படத்துல அந்த சீன் ரொம்ப முக்கியம்”.. வில்லன் கால் தொட்ட விஜயகாந்த்.. கொந்தளித்த ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக கலக்கியவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்ற விஜயகாந்த் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி பலரும் அறியாத ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கடந்த 2001 ஆம் ஆண்டு விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் தவசி. இந்த திரைப்படத்தில் சௌந்தர்யா நாயகியாக நடித்திருப்பார். வடிவேலு மற்றும் பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை உதயசங்கர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக இயக்குனர் உதயசங்கர், தவசி திரைப்படத்தில் ஒரு முக்கியமான சீன் இருப்பதாகவும் அதில் வில்லன் காலை விஜயகாந்த் தொட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதற்கு எந்த வில்லன் சரியாக இருப்பார் என்று கேப்டன் ரசிகர் மன்ற தலைவர்களை அழைத்து இயக்குனர் உதயசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைவரும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த படத்தில் அந்த சீன் முக்கியம் என்றும் அதற்கு விஜயகாந்த் ஒப்பு கொண்டதாகவும் இயக்குனர் தெரிவித்த நிலையில் உடனே ரசிகர் மன்ற தலைவர்கள் அனைவரும் இணைந்து அந்த கதாபாத்திரத்திற்கு பொன்னம்பலம் சரியாக இருப்பார் என்று கூறியும் விஜயகாந்த் க்கு பொன்னம்பலம் சரியான வில்லன் என்றும் கூறினர். இதனைத் தொடர்ந்து தவசி திரைப்படத்தில் பொன்னம்பலம் காலை தொட்டு கழுவும் காட்சியில் விஜயகாந்த் நடித்திருப்பார்.